வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்ஸவம் தொடக்கம்!
ADDED :4371 days ago
செய்யாறு: திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்ஸவ விழா வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ முதல் நாள் விழாவாக கோவில் நிர்வாகம் சார்பில் காலை கொடியேற்றி வைக்கப்படுகிறது. பகலில் அபிஷேகமும், கேடய உற்சவமும் இரவு அபிஷேகம், கற்பக பிருட்சம் காமதேனி வாகனப் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.