சக்தி முனீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா!
ADDED :4371 days ago
கூடலூர்: சக்தி முனீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா கடந்த 3 நாட் கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பறவை காவடி, பால் குடங்கள் எடுத்து நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள். கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பறவை காவடி, பால் குடங்கள் எடுத்து ஏராளமான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து சக்தி முனீஸ்வரர் கோவிலை வந்த டைந்து நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.