உலக அமைதிக்காக அதிருத்ர பாராயணம்!
ADDED :4271 days ago
திருவாரூர்: உலக அமைதி வேண்டியும், நாட்டில் வறட்சி ஏற்படாமல் செல்வ வளம் செழிக்க வேண்டும் என வலியுறுத்தி, 66 வேத விற்பன்னர்கள், காசியில் இருந்து, ராமேஸ்வரம் வரை, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இவர்கள், நேற்றுமுன்தினம், திருவாரூர் அருகே, அரசவனங்காடு, வரகூர், அச்சுதானந்த சுவாமி அதிஷ்ட்டானம் மற்றும் திருவாரூர் தியாகராஜர் கோவில், தேவாசிரிய மண்டபம் ஆகியவற்றில், உலக அமைதி வேண்டியும், திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் நடக்க வேண்டியும், அதிருத்ர பாராயண நிகழ்ச்சி நடத்தினர்.