உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதருக்கு தீர்த்தவாரி

கைலாசநாதருக்கு தீர்த்தவாரி

காரைக்கால்: தை அமாவாசையையொட்டி, கைலாசநாதர் மற்றும் நித்திய கல்யாணப் பெருமாளுக்கு கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது.காரைக்காலில் தை அமாவாசையையொட்டி நேற்றுமுன்தினம் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களை வழிபட்டனர். முன்னதாக கைலாசநாதர் மற்றும் நித்திய கல்யாணப் பெருமாள் ”வாமிகள் கடற்கரையில் எழுந்தருளினர்.அங்கு, சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி முடிந்து நித்திய கல்யாணப் பெருமாள் மற்றும் கைலாசநாதர் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !