உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் உற்சவ அலங்காரம்

அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் உற்சவ அலங்காரம்

விழுப்புரம்: வண்டிமேடு தேவி நகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.தை அமாவாசையையொட்டி விழுப்புரம் வண்டிமேடு தேவி நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி நிர்மலாம்மாள் மற்றும் கே.வி.ஆர்., நகர், வண்டிமேடு பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !