உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் யாகம்!

பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் யாகம்!

சிவகங்கை: மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் மிளகு, பட்டுப்புடவைகள், பழ வகைகள், இனிப்பு வகைகள், தங்கம், வெள்ளி, திரவியப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இடப்பட்டன. யாகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர்.  நீண்டவரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !