விருத்தாசலம் ஆழத்து விநாயகர் நால்வருடன் உலா!
ADDED :4269 days ago
விருத்தாசலம் : மாசிமக உற்சவத்தையொட்டி, ஆழத்து விநாயகர் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு மாசிமக உற்சவம் கடந்த 25ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. தினமும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. 7ம் நாள் உற்சவத்தையொட்டி, மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணியளவில் ஆழத்து விநாயகர், திருஞானசம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோர் பல்லக்கில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.