ரயிலில் நவஜோதிர் லிங்க யாத்திரை மார்ச் 16ல் துவக்கம்!
ADDED :4269 days ago
மதுரை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்கழகம் சார்பில், இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்க ஸ்தலங்களுக்கு செல்லும் ஆன்மிக ரயில் பயணம், மதுரையிலிருந்து மார்ச் 16 ல் துவங்குகிறது.மகாகாலேஸ்வர், ஓம்காரேஸ்வர், சோம்நாத், பீம்சங்கர், தரையம்பகேஸ்வர், குருஸ்னேஸ்வர், அவுரங்நாக்நாத் பார்லி வைத்யநாத்ஸ்ரீ சைலம் ஆகிய 9 ஜோதிர்லிங்க தலங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளது.14 நாட்கள் கொண்ட இப்பயணத்தில், ஏ.சி., கோச்சிலும் பயணிக்கலாம். டீலக்ஸ் கட்டணம் ரூ.39,050, கம்பர்ட் ரூ.32,900, ஸ்டேண்டட் ரூ.23,000, பட்ஜெட் ரூ.17,300 கட்டணம். இதில் தென்னிந்திய சைவ உணவு, தங்கும் அறை, சுற்றிப்பார்க்க பஸ் வசதிகள் அடங்கும், என கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். விபரங்களுக்கு 90031 40714ல் தொடர்பு கொள்ளலாம்.