உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகனுக்கு 45 பவுன் நகை காணிக்கை

திருச்செந்தூர் முருகனுக்கு 45 பவுன் நகை காணிக்கை

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள மூலவருக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பக்தை 45 பவுன் செயின் காணிக்கையாக வழங்கினார். திருச்செந்தூர் கோயிலில் முருகனிடம் பக்தர்கள் வேண்டிக் கொண்டபடி காரியங்கள் நிறைவேறும் போது பக்தர்கள் காணிக்கையாக பொருள்கள் வழங்குவது வழக்கம். முருகன் கோயிலில் உள்ள மூலவருக்கு நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்த செந்தாமரை குடும்பத்தினர் சார்பில் 360 கிராம் எடை கொண்ட, 45 பவுன் தங்க செயினை காணிக்கையாக வழங்கினார். இதன் மதிப்பு 11.50 லட்சமாகும். கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !