ஒரே சன்னதியில் கருடன், அனுமன்!
ADDED :4329 days ago
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் பொன்னூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள கோயிலில் ஒரே இடத்தில் முப்பதடி உயரமுள்ள பெரிய திருவடி கருடாழ்வாரும், இருபத்தைந்தடி உயரமுள்ள சிறிய திருவடி அனுமனும் காட்சி தருவது சிறப்புடையதாகும். இருவருக்கும் ஏணி மேல் ஏறித்தான் அபிஷேகம், ஆராதனைகள் செய்கிறார்கள்.