சோமசமுத்திரம் கோவில் கும்பாபிஷேகம்
செஞ்சி: செஞ்சி தாலுகா கோணை மதுரா சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள விநாயகர், முருகன், அம்மச்சார் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதை முன்னிட்டு 5ம் தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியும், இரவு 7.30 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கடம் யாகசாலை பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8.30 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஜபம், ஹோம திரவிய விசேஷ ஹோமமும், 10.30 மணிக்கு முதல் கால பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. இரவு 11 மணிக்கு யந்திர ஸ்தாபனம், சுவாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.நேற்று காலை 5 மணிக்கு கோபூஜை, விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 8.15 மணிக்கு நாடிசந்தானமும், விசேஷ ஹோம திரவிய ஹோமம், 8.45 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் 8.50 மணிக்கு விநாயகர், முருகன், அம்மச்சார் அம்மன் கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர். பூஜைகளை ஆலம்பூண்டி சிவா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்.