செஞ்சி: சிங்கவரம் குமராத்தம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்
ADDED :4270 days ago
செஞ்சி: சிங்கவரம் குமராத்தம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம் நடந்தது.செஞ்சி தாலுகா சிங்கவரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமராத்தம்மன், கொற்றவை கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம் நடந்தது. 6ம் தேதி இரவு கலச பிரதிஷ்டையும், கணபதி ஹோமம், முதல் கால ஹோமமும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு உலக நன்மைக்காகவும், சத்ருக்கள் அகலவும், நோயின்றி வாழவும், மழை வேண்டியும் மகா சண்டி ஹோமம் நடந்தது. பகல் 10 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது.அம்மனுக்கு மகா அபிஷேகமும், கலச நீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.