திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் காவடி ஊர்வலம்
ADDED :4270 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில், தை கிருத்திகையை முன்னிட்டு, காவடி ஏந்திய பக்தர்கள், மாட வீதி உலா வந்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் காட்சி அளித்த அண்ணாமலையார் கோவிலில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் உள்ள முருகப்பெருமானுக்கு, தை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்படி, பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி என பல்வேறு வகையான, 1,008 காவடிகளை ஏந்தி, மாட வீதி ஊர்வலம் சென்று, முருகப்பெருமானை தரிசித்தனர்.