உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

கவுமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலிலும், கண்ணீஸ்வரமுடையார் கோயிலிலும் திருப்பணி வேலைகள் 50 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. கவுமாரியம்மன் கோயில் தரை தளம் முழுவதும் கிரானைட் பதிக்கப்பட்டது. மூலஸ்தான விமானம் மராமத்து செய்யப்பட்டு பெயின்டிங் செய்யப்பட்டுள்ளது. கருப்பணசாமி வளாகம் கிரானைட் பதிக்கப்பட்டுள்ளது. கோயில் முன்பு செட் போடப்பட்டுள்ளது. கண்ணீஸ்வரமுடையார் கோயில் விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, நந்தீஸ்வரர் சன்னதி கட்டப்பட்டுள்ளது. நந்தீஸ்வரர் விமானத்துடன் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் விமானத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் புதிய படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு கும்பாபிஷேக வேலைகள் தொடங்கி உள்ளன. சனிக்கிழமை காலை கோயில் வீட்டில் இருந்து யானை ஊர்வலத்துடன் கோயிலுக்கு தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !