பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கார்த்திகை திருநாள் கூட்டம்
 பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் வெள்ளிக்கிழமை வந்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வந்து மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். மலைக்கோயிலுக்கு செல்லும் ரோப்கார் மற்றும் வின்ச் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். மலைக்கோயிலிலும் கட்டண தரிசன வாயில், இலவச தரிசன வாயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர்.
மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் பழனி திருமுருக பக்த சபா சார்பில் கார்த்திகை சிறப்பு சொற்பொழிவில் பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் திருமலைசாமி சிறப்புரை நிகழ்த்தினார்.திருக்கோயில் சார்பில் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. தங்கரத புறப்பாட்டை ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். சிறப்பு ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) பாஸ்கரன், உதவி ஆணையர் மேனகா உள்ளிட்டோர் தலைமையில் அலுவலர்கள், அதிகாரிகள் செய்திருந்தனர்.