சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கூடலூர் : கூடலூர் ஆமைக்குளம் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கூடலூர் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ சரகத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா 6ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு வாஸ்து பூஜை, வாஸ்துப்பலி, வாஸ்து கலசாபிஷேகமும், 11:00 மணிக்கு நாடுகாணி ஆற்றங்கரையிலிருந்து திருமஞ்சனம், தீர்த்த குடம், நவதானிய முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 4:30 மணிக்கு அனுஞ்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகபூஜை, இரவு 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, ஸ்ரீவிக்னேஸ்வரா மூல வியாபக நியாசம் நவா வாரண பூஜை, பால விநாயகர், சக்தி விநாயகர், நவக்கிரகங்களுக்கு பிரதாயாக பூஜை, பிரசார வினியோகம் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மகாகணபதி ஹோமம், 1008 அர்ச்சனையுடன் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தசதரிசனம், கோதரிசனம், அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர். * மஞ்சூர் அருகே கன்னேரிமந்தனை ஆயிரம் கண் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மகாபூர்ணாகுதி, மகாதீபாராதணை, யாத்ரா தானம்; காலை 7:30 மணிக்கு விமானம் மற்றும் மூலாயம், மகாஅபிஷேகம், கும்பாபிஷேகம், தீபாராதணை, தசதரிசனம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.