உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா துவக்கம்

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா துவக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூர், பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி, சாமிநாத சிவாச்சாரியார் குழுவினர் சிறப்பு யாக பூஜையும், பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்புஅபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. பின்னர், 20அடி உயரமுள்ள ஐம்பொன் கம்பத்தில், திருவிழா கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் அறங்காவலர் தர்மராஜன், வரதராஜ், பூபதி, மகேஷ், ராமலிங்கம், கேசவராஜசேகரன், வைத்தீஸ்வரன், கீத்துக்கடை குமார், சுகாதார ஆய்வாளர் சம்பத் உபட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, இந்து சமய அற நிலையத்துறை உதவிஆணையர் (அரியலூர்) கோதண்டராமன், நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்தனர்.தொடர்ந்து சிம்மம், சேஷவாகனம், சூரியபிரபை வாகனங்களில் ஸ்வாமி எழுந்தருளல், 11ம்தேதி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 12ம் தேதி, யானை வாகனத்திலும், 13ம்தேதி, புஷ்பக விமானத்திலும், 14ம் தேதி, கைலாச வாகனத்திலும் சாமி திருவீதியுலா நடக்கிறது. வரும், 15ம் தேதி, திருத்தேரோட்ட விழா நடக்கிறது.வரும், 16ம்தேதி கொடியிறக்கம் செய்யப்படுகிறது. 17ம் தேதி ரிஷப வானத்தில் ஸ்வாமி புறப்பாடு நடக்கிறது. 19ம் தேதி, மஞ்சள்நீர் விடையாற்றியுடன் விழா முடிவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !