சமஸ்கிருத உரையாடல் வகுப்பு!
ADDED :4291 days ago
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள, சமஸ்கிருத பாரதி தன்னார்வ தொண்டு நிறுவனம், சென்னையில் பல்வேறு இடங்களில், சமஸ்கிருத உரையாடல் வகுப்புகளை நடத்த உள்ளது. சமஸ்கிருத மொழியை, பேச்சு மொழியாக்கவும், சமஸ்கிருதத்தை உலகெங்கும் பரப்புவதற்காகவும், கடந்த 30 ஆண்டுகளாக, சமஸ்கிருத பாரதி தன்னார்வ தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், பத்தே நாட்களில், அனைவரும் சமஸ்கிருத மொழியில் சரளமாக பேச, சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில், பிப்., 13ம் தேதி முதல் 10 நாட்களுக்கு, சமஸ்கிருத உரையாடல் வகுப்புகளை நடத்த உள்ளது. இதற்கு, கட்டணம் இல்லை. விருப்பமுள்ளவர்கள், சமஸ்கிருத பாரதி, 044-2827 2632, 94437 22009, 98405 64704 என்ற, தொலைபேசி, அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.