உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவராத்திரி சிவாலய ஓட்டம்: பிப். 26ல் துவங்குகிறது

சிவராத்திரி சிவாலய ஓட்டம்: பிப். 26ல் துவங்குகிறது

நாகர்கோவில் : குமரி மாவட்டம், கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாக்களில் உள்ள பழமையான, 12 சிவாலயங்களை, பக்தர்கள், சிவராத்திரி நாளில் ஓடி சென்று வழிபடுகின்றனர். வரும், 27ம் தேதி நடக்கும், சிவராத்திரி விழாவையொட்டி, 26ம் தேதி மாலை, சிவாலய ஓட்டம் தொடங்குகிறது. புதுக்கடை அருகே, முஞ்சிறை மகாதேவர் கோவிலில், ஓட்டம் தொடங்குகிறது. அங்கிருந்து, திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை சிவன்கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன்கோவில், கல்குளம் மகாதேவர் கோவில், மேலாங்கோடு சிவன்கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றியோடு சிவன் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவில் ஆகிய சிவாலயங்களுக்கு ஓட்டம் சென்று, நிறைவு செய்யப்படுகிறது. சிவாலய ஓட்டத்துக்காக, இந்த ஆண்டு, குமரி மாவட்டத்துக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !