சிவனுக்கு முருங்கை இலை நைவேத்யம்
ADDED :5288 days ago
சுந்தரர் திருத்தலா உலா வரும்போது, ஒருமுறை பசியால் களைப்படைந்தார். பெரிய மரங்கள் எதையும் காணவில்லை. ஒரு முருங்கை மரத்தடியின் கீழ் கிடைத்த சிறுநிழலில் அமர்ந்து விட்டார். அப்போது, வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் முருங்கை இலைகளைப் பறித்து, அதனை சமைத்து சுந்தரருக்கு விருந்து படைத்தனர். இச்சம்பவம் நடந்த தலம் கோவை மாவட்டம் துடியலூரில் உள்ளது. இங்குள்ள சிவன் விருந்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். மணலால் செய்யப்பட்ட லிங்கமாக காட்சி தரும் இவருக்கு, முருங்கை இலை நைவேத்யமாக படைக்கப்படுவது சிறப்பு. இத்தலத்தில் தான் சிவன் நந்திக்கு அதிகார நந்தி என்ற பட்டம் கொடுத்ததாக புராணங்கள் கூறுகிறது.