உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேசப்பெருமாள் கோவில் தேர் திருவிழா!

வெங்கடேசப்பெருமாள் கோவில் தேர் திருவிழா!

அவிநாசி: ஆலத்தூர், மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவில் நேற்று திருத்தேர் திருவிழா நடைபெற்றது. மேலத்திருப்பதி என போற்றப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவில் திருவிழா பிப்.6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று காலை ஸ்ரீ தேவி, பூமி நீளாதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !