உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர் கோவில் மலையில் ராமதேவர் சித்தர் குருபூஜை கோலாகலம்!

அழகர் கோவில் மலையில் ராமதேவர் சித்தர் குருபூஜை கோலாகலம்!

பதினெட்டு சித்தர்கள் ஒருவர் ராமதேவர் சித்தர். இவர் மக்கள் அனைவரும் பக்திக்கு பக்குவப்படுதல் அவசியம் என்பதை பக்குவமாக எடுத்துக் கூறி மக்களை வழி நடத்தி சென்று, ஞான மார்க்கத்தினை அடையும் எளிய முறையையும் இயற்கையின் ரகசியத்தையும் உணர்த்துகின்ற மகா சித்தர் கும்பமுனியின் பிரதான சீடர் பகவான் புலத்தியரின் மானசீக சீடர்தான் பகவான் ராமதேவர் சித்தர் - கலியுகத்தில் மக்கள் மக்களாக வாழவேண்டும் என்றும் புவியில் தர்மம் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்றும் அனைவரும் ஒழுக்க நெறியுடனும் மன சாந்தியுடனும் வாழ வாழ்த்தி அருளுகின்ற பகவான் ராமதேவர் சித்தர்.  இவருக்கு ஆண்டு தோறும் மதுரை அருகே உள்ள அழகர்கோயில் மலையில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விஜய வருடம் மாசி மாதம் 4-ம் தேதி (16.2.14) ஞாயிற்றுக்கிழமை பூரம் நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுபதினத்தில் அன்று காலை 9.01 மணிக்கு மேல் குருபூஜை நடைபெறுகிறது. பூஜையன்று ராமதேவர் சித்தருக்கு சிறப்பு அபிஷேகமும் குருபூஜையும் அன்னதானமும் நடைபெற உள்ளது. இந்தகுருபூஜையில் பல மடாதிபதிகளும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொள்வார்கள்.

இதில் 15.2.14, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கும்பமுனி அகஸ்தியர் சீடர் ஸ்ரீலஸ்ரீ பிரம்மானந்த சுவாமிகள் தலைமையில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

16.2.14 ஞாயிற்றுக்கிழமை: காலை 5.00 மணி : 18ம் படி கருப்பணசாமியிடம் சாதுக்களுடன் உத்தரவு பெறுதல்,
காலை 6.00 மணி : சாதுக்களுடன் மலைக்கு புறப்பாடு
இடம் : ராக்காயி அம்மன் தீர்த்தத் தொட்டி,
காலை 10.00 மணி : அபிஷேகம், ஆராதனை நடைபெறும், மதியம் 12.00 மணி முதல் மாங்குளம் மண்டபம் அழகர் கோவிலில் அன்னதானம் நடைபெறும். மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அழகர்கோவிலுக்கு பஸ்வசதி உள்ளது.

தொடர்புக்கு:
பகவான் ராமதேவர் சித்தர் அறக்கட்டளை
பதிவு எண் : 539/09 212, நாயக்கர் புதுத் தெரு. மதுரை - 1
99947 93888, 97861 39108, 95858 52305.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !