திருச்செந்தூர் மாசித்திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர்!
ADDED :4278 days ago
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழாவில், பச்சை சாத்தி கோலத்தில், சண்முகர், நேற்று அருள் பாலித்தார். நேற்று அதிகாலை, சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின், சிவன் கோயில் வந்த, சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி சண்முகர், பச்சை சாத்தி கோலத்தில், எழுந்தருளி வீதியுலா வந்தார். அப்போது பக்தர்கள் திருக்கண் சாத்தி வழி பட்டனர். இன்று காலை, 6:00 மணிக்கு, சண்முகர் மீண்டும் கோயில் வந்து சேர்வார். ஒன்பதாம் திருவிழாவில், சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்தில் எழுந்தருளுவார். அம்பாள் வெள்ளிக் கமல வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கும். நாளை 15 ம் தேதி, காலை, 6:30 மணிக்கு, தேரோட்டம் நடக்கவுள்ளது.