உலகளந்த பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம்!
ADDED :4280 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள்கோவிலில், கருடசேவை உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், உலககளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 12ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, காலை மற்றும் மாலை நேரத்தில் உற்சவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், மூன்றாம் நாள் உற்சவமாக கருடசேவை உற்சவம் நடந்தது. இதில், காலை 6:30 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து, நான்கு ராஜவீதிகளில் வீதியுலா வந்தார். மேலும், இரவு 7:00 மணிக்கு ஹனுமந்த வாகன உற்சவம் நடந்தது.