திருச்செந்தூரில் மாசி தேரோட்டம்!
ADDED :4288 days ago
திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று காலை மாசித் திருவிழாவின் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 5.45 மணிக்கு சிறப்பு பூஜைகள் துவங்கியது. முதலில் 6.20 மணியளவில் விநாயகர் தேரும், அதனைத் தொடர்ந்து சுப்ரமணியர் தேரும், வள்ளி-தெய்வானை தேரும் புறப்பட்டது. ரதவீதிகளில் சுற்றி வந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.