திருக்கடையூரில் ஜெ.,க்கு ஆயுள் ஹோமம்!
ADDED :4288 days ago
திருக்கடையூர் : மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி அன்னை சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் உள்ளது. மார்கண்டேயரை எமனிடம் இருந்து காப்பாற்றிய தலமான இக்கோயிலில் ஆயுள் ஹோமம் நடத்தப்படுவது பிரசித்தி பெற்றதாகும். தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த மகம் நட்சத்திரம் இன்று வருவதை அடுத்து மயிலாடுதுறை எம்.பி., ஓ.எஸ்.மணியன், ஜெயலலிதா பெயரில் ஆயுள் ஹோமம் நடத்தினார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஹோமத்திற்கு பின் 500 பேருக்கு நலத்திட்டங்களை மணியன் வழங்க உள்ளார்.