காஞ்சி காமாட்சி கோயிலில் வெள்ளி ரத உற்சவம்!
ADDED :4363 days ago
காஞ்சிபுரம்: காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, முக்கிய விழாவான வெள்ளி ரத உற்சவம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வடம் பிடித்தனர். தேருக்கு முன்பாக, இரண்டு யானைகள் அணிவகுத்து சென்றன. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.