ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் 8.76 லட்சம் ரூபாய் வருவாய்
ADDED :4287 days ago
காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில், 8.76 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பொது உண்டியல் உள்ளது. இந்த உண்டியல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்படும். கடந்த ஆக்டோபர் மாதத்திற்குப் பிறகு, நேற்று முன் தினம் காலை 11:00 மணி அளவில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம் தலைமையில், உண்டியல் திறக்கப்பட்டது. இந்த உண்டியல் மூலமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 771 ரூபாயும், 13 கிராம் தங்கமும், 96 கிராம் வெள்ளிப் பொருட்களும் இருந்தன. கோவில் செயல் அலுவலர் கேசவராஜன் உள்ளிட்ட பலர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.