உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பிப்., 21 ல் மாசித் திருவிழா

பழநியில் பிப்., 21 ல் மாசித் திருவிழா

பழநி :பழநி மாரியம்மன் கோயில், மாசித்திருவிழா, பிப்., 21 ல் மூகூர்த்தகால் நாட்டுதலுடன் துவங்குகிறது. பழநி தேவஸ்தான உபகோயில்களில் ஒன்றான, மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்., 21ல் முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் துவங்கி 21 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டு விழா பிப்., 25 ல் நடக்கிறது. அன்று காலை திருக்கம்பத்திற்கு காணியாளர் அவர்களால் அரிவாள் எடுத்து கொடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்குமேல் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு, திருக்கம்பம் சாட்டுவிழாவும் நடக்கிறது. கம்பத்திற்கு ஏராளமான பக்தர்கள் புனித நீர், பால் ஊற்றி வழிபாடு செய்வர். மார்ச் 11 ல் திருக்கல்யாணமும், மார்ச் 12 ல் தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !