உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூச்சாட்டுதலுடன் துவங்கியது கோனியம்மன் தேர்த்திருவிழா

பூச்சாட்டுதலுடன் துவங்கியது கோனியம்மன் தேர்த்திருவிழா

கோவை: கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் நேற்று துவங்கியது. கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும், திருவிளக்கு வழிபாட்டுடன் தேர்திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டும் அம்மன் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 10ம் தேதி தேர் முகூர்த்தங்கால் நடப்பட்டது. நேற்று மாலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் பூச்சாட்டு நடந்தது. தொடர்ந்து மார்ச் 10ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இன்று இரவு முதல் அக்னிசாட்டு, புலிவாகனத்தில் அம்மன் திருவீதி உலா, கிளி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, சிம்மவாகனத்தில் அம்மன்திருவீதி உலா, திருவிளக்கு வழிபாடு, அன்னவாகனம், காமதேனு, வெள்ளை யானை வாகனங்களில் உலா நடக்கிறது. வரும் 4ம் தேதி திருக்கல்யாணமும், 5ம் தேதி அம்மன் திருத்தேரில் அமர்தல் மற்றும் தேர்வடம் பிடித்தலும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினரும், கோவில் செயல் அலுவலர் விமலா, உதவி ஆணையர் ஜீவானந்தம் ஏற்பாடு செய்து வருகின்றனர். மார்ச் 10ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இன்று இரவு முதல் அக்னிசாட்டு, புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, கிளி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, சிம்மவாகனத்தில் அம்மன்திருவீதி உலா, திருவிளக்கு வழிபாடு, அன்னவாகனம், காமதேனு, வெள்ளை யானை வாகனங்களில் உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !