உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் விநாயகருக்கு 108 கலச அபிஷேகம்!

தீவனூர் விநாயகருக்கு 108 கலச அபிஷேகம்!

புதுச்சேரி: தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு, 108 கலச அபிஷேகம் நேற்று நடந்தது. மாசிமக தீர்த்தவாரியில் கலந்து கொள்ள புதுச்சேரி வந்த, தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு, புதுசாரம், சித்திபுத்தி விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம், 108 கலச ஆவாஹனம், யாகசாலை பூஜை, 96 வகையான மூலிகை ஷன்னவதி ஹோமமும், மகா பூர்ணாஹூதி தீபாரதனை நடந்தது. இரவு, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால பூஜைகள், மகா பூர்ணாஹூதி தீபாரதனையுடன், கலசம் புறப்பாடு நடந்தது. பின் விநாயகருக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. பகல் மகா தீபாரதனையும், இரவு சுவாமி வீதி முடிந்து, இன்று 19ம் தேதி காலை வழியனுப்பு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, வரவேற்புக் குழு தலைவர் ஆதிகேசவன், செயலாளர் ரவி, பொருளாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !