உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துப்பேட்டை தர்காவில் கொடிமரம் நடும் விழா

முத்துப்பேட்டை தர்காவில் கொடிமரம் நடும் விழா

திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே, ஜாம்பவானோடை தர்காவில், 712ம் ஆண்டு, கந்தூரி விழாவை முன்னிட்டு, நேற்று, கொடிமரம் நடும் விழா நடந்தது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில், ஆண்டு தோறும், 14 நாட்கள், கந்தூரி விழா நடக்கும். 712ம் ஆண்டு கந்தூரி விழா, வரும், மார்ச், 2ம் தேதி மாலை, கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக, நேற்று, புனிதக் கொடி மரம் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு, தர்கா முதன்மை அறங்காவலர், பாகக்அலி சாஹிப் தலைமையில், புனித தாவூதியா மஜ்லி ஸில் ஷேக் தாவுது ஆண்டவரின் புனித மவுலூது ஓதப்பட்டது. நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று, சிறப்பு தொழுகை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !