உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் வரும் 26ல் சிவராத்திரி விழா

அங்காளம்மன் கோவிலில் வரும் 26ல் சிவராத்திரி விழா

திருப்பூர்: முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் சிவராத்திரி விழா வரும் 26ல் கொடியேற்றத் துடன் துவங்குகிறது. மறுநாள், சிவராத்திரியன்று, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட அக்னி தீர்த்தத்தால், சுவாமிக்கு அபிஷேக பூஜை, தேவேந்திர பூஜை, முகம் எடுத்து ஆடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதிகாலை 3.00 மணிக்கு அம்பாள், மயான பூஜை வல்லான கண்டனை சம்ஹாரம் செய்கிறாள். அமாவாசையான 28ம் தேதி, தங்க கவச அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவார். மார்ச் 1ல் அம்மன் ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி, மறுநாள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 3, 4ல், பரிவேட்டை, வேட்டையாடுதல், மாவிளக்கு எடுத்தல், மஞ்சள் நீர் ஊர் வலம் நடக்கிறது. சிவராத்திரி விழா முடியும் வரை (26 முதல் 4ம் தேதி வரை) தினமும் அம்மன் திருவீதி உலா, மாலை நேரத்தில் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !