ராமநாதபுரம் முத்தாலம்மன் கோயிலில் சிவராத்திரி விழா துவக்கம்
ADDED :4284 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் மகா சிவராத்திரி விழா இன்று( பிப்.19) காப்பு கட்டுதல், கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. பிப்.20லிருந்து 26 வரை தினமும் காலை பல்வேறு அலங்காரம், தினமும் இரவு மயில்,காமதேனு, யானை, சிம்ம, அன்ன, ரிஷப, குதிரை வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. பிப். 23ல் தர்மதாவள விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை, பிப்., 27ல் மகா சிவ ராத்திரியை முன்னிட்டு, காலையில் தேரோட்டம், மார்ச் 1ல் பால்குடம், புஷ்ப பல்லக்கு வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை ஆயிர வைசிய மகாஜன சபையினர் செய்துள்ளனர்.