ஆதிநாதர் கோயிலில் மாசித் திருவிழா
ADDED :4289 days ago
ஆழ்வார்திருநகரி: ஆதிநாதர் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு சுவாமி நம்மாழ்வார் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் மாசித் திருவிழா பிப். 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10-ம் நாளான பிப். 19-ம் தேதி சுவாமி பொழிந்துநின்றபிரான் தெப்ப உற்சவம் நடைபெற்றது. நேற்று (பிப்.20) காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7.30-க்கு திருமஞ்சனம், 8.30-க்கு தீபாராதனை, 9-க்கு நித்தியல் கோஷ்டி ஆகியவை நடைபெற்றன.