மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழா!
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி, மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா,நாளை (பிப்., 27ல்) துவங்குகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, நிர்வாகஅதிகாரி ராஜாதெரிவித்தார்.தேனி மாவட்டம்,தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன்கோயில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். தேவதானப்பட்டியில் இருந்து, 3கி.மீ., தொலைவில் மஞ்சளாற்றங்கø ரயில்அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலஸ்தானம் என்னும் குச்சிவீட்டின் கதவுதிறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு, மூன்று கால பூஜைநடக்கிறது.பக்தர்கள் வழங்கும் நெய்யினால், ஆண்டு முழுவதும் இரவு, பகல் அணையாத நெய்விளக்குஎரிகிறது. இங்கு உறுமி,சங்கு, சேகண்டிகள்முழங்க நடைபெறும்சாயரட்சை பூஜையில்,சயன உத்தரவு கேட்டது சிறப்பம்சம். விழாவில்தேனி, திண்டுக்கல்,மதுரை மாவட்டங்களில்இருந்து, ஏராளமானபக்தர்கள் பங்கேற்பார்கள்.நடப்பு ஆண்டில், மாசிமகா சிவராத்திரி திருவிழாவிற்காக, கடந்த பிப்., 6ல்முகூர்த்தக்கால் நடப்பட்டது. மாசி மகா திருவிழா,நாளை (பிப்., 27ல்)துவங்கி மார்ச் 3ல் நிறைவடைகிறது. 200 மேற்பட்டபோலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுகின்றனர். மேலும் தீயணைப்புதுறையினர் வாகனங்களுடன் தயார் நிலையில் இருப்பர். தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையமருத் துவக்குழுவினர் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆண்டிபட்டி, வத்தலக்குண்டு, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய ஊர்களில்இருந்து, சிறப்பு பஸ்கள்இயக் கப் ப டு கின் றன.பக்தர்களின் வசதிக்கானதண்ணீர், தற்காலிக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் மஞ்சளார்அணையில் இருந்து, ஆற்றில் நீர்திறந்து விடப்பட்டுள்ளது. இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளதாக, நிர்வாக அதிகாரி ராஜா தெரிவித்தார்.