உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருப்போரூர் கோவில் நிலம் மீட்பு!

பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருப்போரூர் கோவில் நிலம் மீட்பு!

சென்னை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள, திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலம், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் கோவிலுக்குச் சொந்தமான, 5,000 சதுர அடி நிலம், சென்னை, மயிலாப்பூரில், திருவள்ளுவர் சிலைக்கு அருகில் உள்ளது. இதில், 2001 முதல், அசோக் என்பவர், வாடகை செலுத்தி, துணிக்கடை நடத்தி வந்தார். அவர் இறந்த பிறகு, அருண் என்பவர், கடையை நடத்தி வந்தார். கோவிலுக்கு சொந்தமான இடங்களுக்கான, புதிய கட்டணம் நிர்ணயித்தபோது, அந்த கட்டணத்தை செலுத்த, அருண் மறுத்து வந்தார். இதனால், 6.5 லட்ச ரூபாய், பாக்கி சேர்ந்தது. அறநிலையத் துறை பல முறை எச்சரிக்கை விடுத்தும், பலன் இல்லை. இந்நிலையில், திருப்போரூர் கந்தசாமி கோவில் செயலர் அலுவலர், பாலகிருஷ்ணன் தலைமையிலான, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை மீட்டு, கடைக்கு," சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !