நெருஞ்சிக்குடி கருப்பர் கோயிலில் மாசி களரி திருவிழா!
சிவகங்கை :காளையார்கோயில் அருகேயுள்ள நெருஞ்சிக்குடி கருப்பர்(அய்யனார்) கோயில் மாசி களரியில்,ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.300 ஆண்டு பழமையான இக்கோயிலை குல தெய்வமாக வணங்குவோர் சென்னை, கோவை, மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் வசிக்கின்றனர். இங்கு நடக்கும் மாசி மகா சிவராத்திரி, களரி விழாவிற்கு குடும்பத்தினருடன் அனைவரும் பங்கேற்பது வழக்கம். இவ்வாண்டு,சிவராத்திரி விழா நேற்று முன்தினம் நடந்தது. நேற்று களரி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் காவடி, பால் குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்தினர்.கோயிலுக்கு முன்புறமுள்ள மரத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினால், நினைத்து காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.விழாவில் கண்ணன் அம்பலம், உடையார் ராக்கத்தாள் அறக்கட்டளை தலைவர் செல்வரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.வி.எஸ்.பி.,எல்.ஐ.சி. கிருஷ்ணன் செட்டியார் உட்பட விழாக் குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.