உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நள்ளிரவில் நடந்தகுல தெய்வ வழிபாடு!

நள்ளிரவில் நடந்தகுல தெய்வ வழிபாடு!

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில், மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு, பொதுமக்கள் பலரும் நள்ளிரவில் குலதெய்வ வழிபாடு மேற்கொண்டனர். ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்து வழிபட்டனர். மகா சிவராத்திரி குல தெய்வ வழிபாட்டிற்காக, ஆண்டிபட்டியில் இருந்து, பல்வேறு ஊர்களுக்கு பக்தர்கள் சென்றனர். வெளியூர்களில் இருந்து பலரும், தங்கள் குல தெய்வ வழிபாட்டிற்காக ஆண்டிபட்டி பகுதிக்கு வந்திருந்தனர். சக்கம்பட்டியில் அழகர்சாமி நாயக்கர், சீலக்காரியம்மன், அய்யனார், மதுரைவீரன், வெள்ளைஞானியார் கோயில்களில் பொதுமக்கள் குலதெய்வ வழிபாட்டில், பொங்கலிட்டு, பயறு படையல் செய்து, நள்ளிரவு பூஜை, வழிபாடுகள் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !