திருப்பணிக்காக மகா சாந்தி ஹோமம்
ADDED :4274 days ago
உத்தமபாளையம்: உத்தமபாளையம் யோக நரசிங்கப் பெருமாள்-மகாலட்சுமி தாயார் கோயிலில் மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம் நடந்தது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகளும், கட்டட வேலைகளும், கும்பாபிஷேகமும் நடக்க வேண்டி, இந்த ஹோம நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஸ்தானிகர் ரெங்கராஜன் மற்றும் பண்டிதர்கள் பங்கேற்று மகாசாந்தி ஹோமத்தையும், வேத பாராயணத்தையும் நடத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு, கோயில் திருப்பணிகள் விரைவில் நடைபெற பிரார்த்தித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். ஏற்பாடுகளை ஓம் நமோ நாராயணா பக்த சபையினர் செய்திருந்தனர்.