பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா!
ADDED :4274 days ago
செய்யூர்:சூணாம்பேடு அங்காள பரமேஸ்வரி கோவிலில், மகா சிவராத்திரியை ஒட்டி, 69ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா, கோலா கலமாக நடந்தது.இந்த விழாவில், நேற்று மாலை, 5:00 மணிக்கு அம்மன் பரிவாரங்களுடன் மயானம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை: நரசம் பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில்,நேற்று மயான கொள்ளை திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், துவங்கிய அம்மன் ஊர்வலம், அப்பல்ராஜி கண்டிகை கூட்டு சாலை அருகே உள்ள, மயானத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில், திரளான பக்தர்கள், அம்மனின் வேடமணிந்து வந்து, நேர்த்திக்கடனை செலுத்தினர்.