பராசக்தி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
ADDED :4463 days ago
விருத்தாசலம் : விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன், பராசக்தி அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.விருத்தாசலம் சந்தைத்தோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினசரி காலை அங்காள பரமேஸ்வரி, புற்று மாரியம்மன், விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.நேற்று முன்தினம் எட்டாம் நாள் உற்சவத்தையொட்டி, இரவு 8:00 மணியளவில் அம்மன் பராசக்தி அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.