உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்ச் 16-ம் தேதி நவஜோதிர்லிங்க சுற்றுலா ரயில்

மார்ச் 16-ம் தேதி நவஜோதிர்லிங்க சுற்றுலா ரயில்

சென்னை:   வரும் மார்ச் 16-ம் தேதி முதல் நவஜோதிர்லிங்க சுற்றுலா ரயில் சேவை துவங்ககிறது. இந்தியாவில்  சோம்நாத், மகாலேஸ்வர், ஓம்காரேஸ்வர், அவுங்நாக்நாத் பார்லி, வைத்யநாத், ஸ்ரீசைலம்  உள்ளிட்ட 9 ஜோதிர்லிங்க திருத்தலங்கள் உள்ளன. இந்த யாத்திரை ரயில் மார்ச் 16 ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்படுகிறது. பக்தர்களின் உணவு வசதிக்காக தென்னிந்திய சைவ உணவு சமைப்பதற்காகவே ஒரு முழு ரயில் பெட்டியும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி திருத்தலங்களை தரிசிக்க ஐ.ஆர்.சி.டி.சி.   தரிசன ரயிலை ஏற்பாடு செய்துள்ளது. 15 நாட்கள் கொண்ட இச்சுற்றுலாவுக்கு  சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் முன்பதிவு செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !