ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்: மார்ச் 12ல் பாலாலய பூஜை!
ADDED :4268 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்காக, மார்ச் 12ல், பாலாலய பூஜை நடைபெற உள்ளது. ராமேஸ்வரம் கோயிலில், கடந்த 5.2.2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் கடந்து விட்டதால், இந்தாண்டு இறுதியில் கும்பாபிஷேகம் நடத்த, அறநிலைத்துறை தீர்மானித்தது. அதன்படி, கோயிலில் உள்ள ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், விநாயகர் உள்ளிட்ட 21 சன்னதியின் விமானங்கள்(கோபுரம்), கிழக்கு, மேற்கு ராஜகோபுரத்திற்கு பாலாலய பூஜையை முன்னிட்டு மார்ச் 11 காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது. மாலையில் முதல்கால யாக பூஜை நடைபெறும். மார்ச் 12, காலை 7 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, கஜ பூஜை, கோ பூஜைக்கு பின்னர் பாலாலய பூஜை நடைபெறும் என, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.