உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளவனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் தேர் திருவிழா!

வளவனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் தேர் திருவிழா!

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வளவனூர் குமாரபுரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவம் மற்றும் புதிய தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 27ம் தேதி இரவு 9 மணிக்கு துவஜா ரோகணமும், 28ம் தேதி மயானக் கொள்ளை, 1ம் தேதி வேப்பங்கிளையில் சுவாமி உற்சவம் நடந்தது. பின், 2ம் தேதி விமானத்தில் அம்மன் உற்சவம், 3ம் தேதி பின்னக்கிளையில் உற்சவம், 4ம் தேதி அரசமரக்கிளையில் உற்சவம் நடந்தது. தொடர்ந்து 5ம் தேதி மதியம் 3 மணிக்கு புதிய தேர் திருவிழாவும், 6ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும் நடந்தது. இன்று 7ம் தேதி இரவு 8 மணிக்கு மகா கும்ப பள்ளயம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !