ராஜபாளையம் முத்துமாரியம்மன்கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :4266 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் மலையடிப்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன்கோயில் கும்பாபிஷேகவிழா, மார்ச் 6ல் விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 10.30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அம்மன், விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பிற்பகல் அன்னதானம் நடந்தது. ஐந்து சமுதாய தலைவர்கள் முனியாண்டி, ஞானகுரு, வி.வேல்சாமி, ஆர்.வேல்சாமி, குருசாமி, ராமசாமி, பொருளாளர் மாரியப்பன் கலந்துகொண்டனர்.