திருமறைநாதர் கோயிலில் வரும் 19ல் கும்பாபிஷேகம்!
ADDED :4264 days ago
மதுரை: திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம், வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலில் திருப்பணி முடிந்த நிலையில், தற்போது கும்பாபிஷேகப் பணிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்படி, வரும் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு யாகசாலைப் பூஜைகள் தொடங்குகின்றன. பூஜைகள் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகின்றன. அன்று காலை ஆறுகால யாகசாலைப் பூஜைகள் நிறைவடைந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.