உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்பள்ளியில் மகாலட்சுமி!

மடப்பள்ளியில் மகாலட்சுமி!

பகவானுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் முக்கிய சமையலறையை "பொட்டு என்று சொல்கிறார்கள். இதற்குள்  அருள்பாலிக்கிறாள். அவளை "பொட்டு அம்மா என்கிறார்கள். இதற்கு "சமையலறை பெண்மணி என்பது பொருள். இவளை "மடப்பள்ளி நாச்சியார்  என்றும் அழைப்பதுண்டு. இந்த பெண்மணியே ஸ்ரீநிவாசனுக்கு திருமலையில் தங்க இடமளித்த வராக சுவாமியால் அனுப்பப்பட்ட வகுளமாலிகா என நம்பப்படுகிறது. இவள்தான் பத்மாவதியுடன் ஸ்ரீநிவாசனுக்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்தாள். வரலட்சுமி விரத நாளில் இந்த தாயாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மற்றொரு சமையலறையிலும் மகாலட்சுமியின் சிற்பம் உள்ளது. இந்த சமையலறையில் அன்னப்பிரசாதம், பணியாரம், லட்டு, வடை, அப்பம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்த சிறிய சமையலறையை "படிப்பொட்டு என அழைக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !