உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

பொதட்டூர்பேட்டை : காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதட்டூர்பேட்டை அடுத்த, பாண்டரவேடு கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமையான காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் சீரமைப்பு பணிகள், கடந்த ஓராண்டாக நடந்து வந்தது. சமீபத்தில் பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி, நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று காலை 11:00 மணியளவில், யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அபிஷேகம் நடந்தது. புதிய கொடி மரம், கணேசர், தண்டபாணி, நவகிரகம் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !