அபிராமேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
ADDED :4226 days ago
விழுப்புரம்: திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் கோவிலில் புதிய திருத்தேர் கரிகோலம் வெள்ளோட்ட விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் கோவிலில் புதிய தேர் இலுப்பை, வாகை, தேக்கு ஆகியவற்றால் 50 டன் எடையுள்ள மரம் மற்றும் 5 டன் இரும்பினால் சக்கரங்கள் பொருத்தி திருப்பணிகள் நடந்தது.புதிய தேருக்கு நேற்று காலை 8:50 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து வெள்ளோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தார். திருப்பணி பொறுப்பாளர் குபேரன் தலைமையில் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.